ஜெனீவா : உலகளவில் கடந்த வாரம் 30 லட்சம் பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது 10 விழுக்காடு அதிகமாகும். அதேபோல் உயிரிழப்பும் 3 விழுக்காடு அதிகரித்துள்ளது. கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் உலகளவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கரோனா பாதிப்புகளை பொறுத்தமட்டில் பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து காணப்படுகிறது.
எளிதில் பரவக் கூடிய புதிய வகை டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் 111 நாடுகளில் காணப்படுகின்றன. ஆகவே பொது மக்கள் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
சரியான திட்டமிடல் இல்லையென்றால் தொற்று அதீத வேகத்தில் பரவும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : மூன்றாம் அலை- டெல்டா அறிகுறிகள் என்னென்ன?