ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாகும். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தற்போது புதிதாக 325 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஸ்பெயினில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 128ஆக உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர். 23 ஆயிரத்து 822 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உடற்பயிற்சிக் கூடங்கள், முடித்திருத்தும் கடைகள் உள்ளிட்டவை முதல்கட்டமாக திறக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி மே 11ஆம் தேதிக்குப் பிறகு மதுபான கடைகள், தேநீர் கடைகள் திறக்கப்பட உள்ளன.
கரோனா தொற்று குறைவாக உள்ள இடங்களில் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட உள்ளன. மேலும் ஜூன் மாத இறுதிக்குள் ஊரடங்கில் தளர்வுகளைக் கொண்டுவர ஸ்பெயின் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: 30 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!