கரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிருக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. உலக நாடுகளில் தினம்தோறும் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் மாகாணத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அங்கு பிட்டர்ன் பார்க் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி சிறுமி சோபியாவுக்கு வாழ்த்து தெரிவித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சோபியாவின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் என்று தங்கள் பகுதிக்கான வாட்ஸ்-ஆப் குழுவில் மெசஜ் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அனைவரும் வீடுகளின் ஜன்னலை திறந்து பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை மகிழ்ச்சியுடன் பாடி சிறுமியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்த அழகிய காணொலி பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
இதையும் படிங்க: ஜம்முவில் 3.5 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை