தி ஹேக்கில் உள்ள சவுதி தூதரகம் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில், தூதரக வளாகத்தில் முகப்பும், பல கண்ணடி ஜன்னல்களும் சேதம் அடைந்தன. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் வான் சாண்டன் கூறுகையில், “டச்சு நகரில் ஒரு கால்வாயின் எதிரே உள்ள கட்டடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது குறித்து காவல் துறையினர் முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்தனர்" என்றார். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிதறிகிடந்த தொட்டாக்களை வைத்து ஆய்வு செய்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதலாம் உலகப் போரின் முடிவை நினைவுகூரும் வகையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அலுவலர்கள் அஞ்சலி செலுத்த சென்றபோது, ஏற்பட்ட குண்டு வெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர். ஹேக்கில் நடந்த குண்டுவெடிப்புடன், தூதரக துப்பாக்கிச்சூட்டிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எந்தவொரு சாட்சியமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.