'காதல்' என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு.
அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் லவ் ப்ரபோஸ் செய்வதற்காக, ஜிபிஎஸ் உதவியுடன் 4 ஆயிரத்து 451 மைல்களை சுமார் 6 மாதம் காலங்களில் கடந்து சென்று புரோபோஸ் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
-
VIDEO: A Russian officer finds a novel way to propose to his girlfriend using 16 military tanks parked in a heart-shaped formation pic.twitter.com/lMIdhyxOxE
— AFP news agency (@AFP) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO: A Russian officer finds a novel way to propose to his girlfriend using 16 military tanks parked in a heart-shaped formation pic.twitter.com/lMIdhyxOxE
— AFP news agency (@AFP) February 15, 2020VIDEO: A Russian officer finds a novel way to propose to his girlfriend using 16 military tanks parked in a heart-shaped formation pic.twitter.com/lMIdhyxOxE
— AFP news agency (@AFP) February 15, 2020
அதே போல், சமீபத்தில் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று, மற்றுமொரு வித்தியாசமான ப்ரபோசல் வெகுவாக கவர்ந்தது. அதில், ரஷ்யா நாட்டின் மாஸ்கோவில் உள்ள அலபினோ பயிற்சி மையத்தில் தனது காதலி அலெக்ஸாண்ட்ராவிடம் காதலை தெரிவிக்க கசண்ட்ஸேவ்(Kazantsev) என்ற ராணுவ வீரர், 16 பீரங்கி வாகனங்களை இதய வடிவில் நிறுத்தினார்.
அதன் பின்பு, தனது காதலியின் கண்களை கட்டியவாறு அழைத்துவந்து பீரங்கிகளின் நடுவில் நிறுத்தி தரையில் மண்டியிட்டு "ஐ லவ் யூ" என்று தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அலெக்ஸாண்ட்ரா சிறிய புன்னகையின் மூலம் ஓகே தெரிவிக்க பின்னர் இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பினை பரிமாறிக் கொண்டனர்.
இந்த க்யூட்டான லவ் ப்ரோபோசல் வீடியோவை படம்படித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அதனை சமூக வலைதளத்தில் படமாக வெளியிட்டது. இப்படி க்யூட் லவ் ப்ரபோஸ் செய்றவங்கள எந்த பொண்ணுதான் மிஸ் பண்ணுவாங்க...
இதையும் படிங்க: ஒரு மணி நேரம் இடைவிடாத முத்த மழை - அசத்திய காதல் ஜோடிகள்!