ETV Bharat / international

உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்ற ரஷ்யா! - உக்ரைன் விவகாரம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்ற ரஷ்யா

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலைமை குறித்து நேட்டோ நாடுகளுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.

உக்ரைன் விவகாரம்
உக்ரைன் விவகாரம்
author img

By

Published : Feb 18, 2022, 8:19 PM IST

டெல்லி: 'அமைதியான - ஆக்கப்பூர்வமான ராஜதந்திரம்' காலத்தின் கட்டாயம் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நேற்று (பிப்ரவரி 17) பேசியது.

இதற்கு அடுத்த நாளே (இன்று - பிப்ரவரி 18) இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதன் ட்வீட்டில், 'இந்தியாவின் சமச்சீரான கொள்கை - சுதந்திரமான அணுகுமுறையை நாங்கள் (ரஷ்யா) வரவேற்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளது.

நீடித்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

உக்ரைன் விவகாரம் குறித்து நேற்று ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பேசுகையில், பதற்றமான இந்த நிலைமையை உடனடியாகத் தணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், 'நிலைமையை விரைவில் தணிக்கவும், நீடித்த ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் நிலைமையைச் சரிசெய்யவும் இந்தியா ஆதரவளிக்கிறது' என்றார்.

வியாழக்கிழமையன்று வெளியுறவுத் துறை அமைச்சகம், கட்டுப்பாட்டு அறை அமைத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உரிய தகவல்களையும், உதவிகளையும் வழங்கிவருகிறது. மேலும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக 24 மணி நேர உதவி மையத்தை அமைத்துள்ளது.

ராணுவ வீரர்கள், டாங்கிகள் திரும்பப் பெறும் ரஷ்யா

உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியது, மேலும் கடற்படை பயிற்சிகளுக்காக கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது, இது உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு குறித்து நேட்டோ நாடுகளிடையே கவலையை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டத்தை ரஷ்யா மறுத்துவருகிறது.

உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்ற ரஷ்யா

இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டாங்கிகள், ராணுவ உபகரணங்கள், ராணுவப் பணியாளர்கள் தங்கள் நிரந்தரத் தளங்களுக்குத் திரும்பினர். அமெரிக்கா தனது நாட்டில் நிலவும் பணவீக்கம், சரிந்துவரும் டாலர் மதிப்பு, சீனா ஆதிக்கம் உள்ளிட்ட பல தோல்விகளை மறைக்கும் வகையிலேயே இந்த மாதிரி ஒரு பிரச்சினைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ரஷ்யாவுக்கு எதிராக அதன் அண்டை நாடான உக்ரைனில் தனது போர்த் தளவாடங்களை நிறுவுவதற்கும் அந்நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்க தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபடுவது ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நிலவும் அமைதி, ஒற்றுமையைச் சீர்குலைக்கும்விதமாக இருப்பதாக ரஷ்யா உள்ளிட்ட அதன் நேச நாடுகள் குற்றஞ்சாட்டின.

இதையும் படிங்க: வெறும் 45 விநாடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த இளம் யூ-ட்யூபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.