சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று தற்போது உலகிலுள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. கரோனா தொற்றால் ஐரோப்பியாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி இருக்கிறது. பெருந்தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு காரணமாக இத்தாலியில் பல்வேறு துறைகளும் முடங்கியுள்ளன. குறிப்பாகத் திரைத் துறை எந்தவொரு பணியையும் மேற்கொள்ள முடியாமல் முற்றாக முடங்கியுள்ளது. இத்தாலியில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருவதால் ஊரடங்கை நீக்க அந்நாட்டு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி இத்தாலியின் திரைத் துறை தலைநகராகக் கருதப்படும் லாசியோ பகுதியில் திங்கள்கிழமை முதல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என இரண்டின் படப்பிடிப்பும் கட்டுப்பாடுகள் தொடங்கப்படவுள்ளன.
படப்பிடிப்புகளின்போது பின்பற்ற வேண்டியவை குறித்து இத்தாலி அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர்கள் அனைவரும் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும், படப்பிடிப்புத் தளத்திலுள்ளவர்களின் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், தளத்திலுள்ள அனைவரும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மேலும், படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் தளங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மருத்துவர் ஒருவர் எப்போதும் இருக்க வேண்டும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைகளை எளிதாக்க வேண்டும் என்றும் தங்களுக்குப் பொருளாதார ரீதியான உதவிகளை அரசு அறிவிக்க வேண்டும் இத்தாலியின் பிரபல தயாரிப்பாளர் ஃபிரான்செஸ்கா சிமா அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் கொலை - குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு