ETV Bharat / international

இத்தாலியில் வெள்ளம் - மீட்பு பணி தீரவிரம் - வெள்ளம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலி
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலி
author img

By

Published : Dec 7, 2020, 8:56 PM IST

ரோம் (இத்தாலி): இத்தாலி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடந்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் அந்நாட்டின் மத்திய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக அந்நாட்டின் நோநான்டோலா, ஃபாஸல்டா, கேம்போ கலியானோ, எமிலியா ரோமாக்னா ஆகிய பகுதிகளில், 160 தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலி

மேலும் நோநான்டோலாவில் உள்ள பனாரோ நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தேங்கிய வெள்ளத்தில் போட்டிங்... வைரலாகும் சிறுவர்களின் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.