மாஸ்கோ: ரஷ்ய அமைச்சரவை மாற்றியமைப்பதற்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போதைய ரஷ்ய அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பத்தாவதாக புது அமைச்சரை நியமிக்க அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்ய பிரதம அமைச்சர் மிக்கேல் மிசூஸ்தீன், மின்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நோவக்கை பத்தாவது கேபினட் அமைச்சராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அதிபர் புதினிடம் வலியுறுத்தினார்.
இதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவே, மிக்கேலை பத்தாவது கேபினட் அமைச்சராக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தார். இதையடுத்து. அமைச்சரவையில் மேலும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'அமெரிக்காவிற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்' - பிடன்!