உலகப் பெருந்தொற்றான கரோனா பாதிப்பை எதிர்கொள்ள உலக நாடுகள் போராடிவருகின்றன. பிரிட்டன் நாட்டில் இதுவரை 2.83 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40 ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவைச் சமாளிக்க அந்நாட்டு அரசு ஒருபுறம் போராடிவந்தாலும், தன்னார்வலர்கள் பலர் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவியை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோன்ற தன்னார்வ தொண்டு அமைப்பில் அரசக் குடும்பத்தின் இளவரசர் வில்லியம்ஸ் பணிபுரிந்துவருவது தெரியவந்துள்ளது.
இது குறித்து காணொலி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், இந்தச் செயல்பாட்டில் தன்னுடைய மனைவி பக்கபலமாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நோய் பாதித்தவர்களுக்கு தேவையான தகவல்களை இலவச தொலைப்பேசி எண்கள் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள், குறுஞ்செய்தி மூலம் அடிப்படைத் தகவல்களைப் பகிர்தல் உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உச்சம் தொட்ட கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை: திணறிவரும் பிரேசில்