ETV Bharat / international

தாத்தாவுக்காக தாயகம் திரும்பிய இளவரசர் ஹாரி! - பிரிட்டன் செய்திகள்

இளவரசர் ஹாரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மனைவி மேகனுடன் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், தனது தாத்தா பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக் முதன்முறையாக பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளார்.

இளவரசர் ஹாரி
இளவரசர் ஹாரி
author img

By

Published : Apr 13, 2021, 10:35 AM IST

இங்கிலாந்து இளவரசர் பிலிப் தன் 99ஆவது வயதில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

கரோனா விதிமுறைகள் காரணமாக இந்த இறுதிச் சடங்கில் மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தனது தாத்தா பிலிப்பின் இறுதிச் சடங்கில் இளவரசர் ஹாரி பங்கேற்க உள்ளார்.

பிரிட்டன் வந்த ஹாரி

இளவரசர் பிலிப் - ராணி எலிசெபத்தின் பேரனும், இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகனுமான இளவரசர் ஹாரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர் முதன்முறை பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளார். ஹாரியின் இந்த முதல் பிரிட்டன் பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஏப்.10) லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வந்த இளவரசர் ஹாரி, தற்போது சுய தனிமைப்படுத்துதலில் உள்ளார். ஹாரியின் மனைவி மேகன் கருவுற்ற்றிருக்கும் காரணத்தால் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்கப்போவதில்லை எனும் தகவலும் வெளியாகி உள்ளது.

நிற வெறித் தாக்குதலை சந்தித்த மேகன்

பிரிட்டன் ராணி எலிபெத்தின் பேரனும் இளவரசருமான ஹாரி, 2018ஆம் ஆண்டு, தன் காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகனை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதி கடந்தாண்டு மார்ச் மாதம் யாரும் எதிர்பாராத வகையில் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

தொடர்ந்து, அமெரிக்காவின் ஊடகப் பிரலமான ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அளித்த பேட்டியில் மேகன் மீது நிற வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மேகன் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டதாகவும், ஹாரி - மேகன் தம்பதியினர் தெரிவித்தனர். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நிறவெறி சர்ச்சையில் இங்கிலாந்து அரச குடும்பம்-மேகன் மெர்கல் கண்ணீர் பேட்டி

கவலை தெரிவித்த ஹாரி

மேலும், அந்த நேர்காணலில் அரச குடும்பம் தனது நிதி ஆதாரங்களை முடக்கி, பாதுகாப்பை விலக்கிக்கொண்டதாக புகார் தெரிவித்த இளவரசர் ஹாரி, அரச குடும்பம், தனது மனைவிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாகவும் கவலை தெரிவித்தார். இது சர்வதேச அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதன் பிறகே ஹாரி - மேகன் தம்பதியினர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். இந்நிலையில் இந்த குடும்பப் பிரச்னைகளுக்குப் பிறகான ஹாரியின் முதல் வருகை மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ஏப்ரல் 17ஆம் தேதி இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.