வாடிகன் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஞாயிறுதோறும் மக்களைச் சந்தித்து பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் தற்போது இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஒரே இடத்தில் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க நாளை நேரலை மூலம் பிராத்தனையில் ஈடுபடவுள்ளளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, "வைரஸ் பரவுவதைத் தடுக்க போப் ஆண்டவர் வாட்டிகன் செய்தி தொலைக்காட்சி மூலம் நாளை நேரலையில் பிரார்த்தனை மேற்கொள்வார்" எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்த போப் ஆண்டவருக்கு, கொரோனா வைரஸ் உள்ளதா என சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. இருப்பனும் அவர் மக்களைச் சந்திப்பது, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலிருந்து சற்று விலகியே உள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதன் காரணமாக இத்தாலியில் இதுவரை 196 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 3, 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : 'சசிகலா பின்னாடி ஒரு கூட்டமே இருக்குது; அரசியல் மாற்றம் நிச்சயம்' - சுப்பிரமணியன் சுவாமி