ETV Bharat / international

Brexit பிரெக்ஸிட்டை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம்! - Brexit extension

லண்டன்: பிரெக்ஸிட்டை ஒத்திவைக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரை மனதுடன் கடிதம் எழுதியுள்ளார்.

boris
author img

By

Published : Oct 20, 2019, 11:34 AM IST

Updated : Oct 20, 2019, 7:59 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறத் திட்டமிட்டுள்ளது. இதனையே (Britain + Exit = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள்.

இந்த பிரெக்ஸிட்டை சுமுகமானதாக்க, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த 17ஆம் தேதி திருத்தங்களுடனான புதிய பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்.

இந்த வரைவு ஒப்பந்தம் தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. (37 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமையன்று பிரிட்டன் நாடாளுமன்றம் கூடுவது, இதுவே முதல்முறையாகும்)

எம்.பி.க்கள் இடையே நடந்த காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவைத் தாமதமாக்க வேண்டும் என்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

பிரிட்டன் நாடாளுமன்றம்
பிரிட்டன் நாடாளுமன்றம்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதம் ஆக்கும் இந்தத் தீர்மானத்துக்கு, 322 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 306 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இது பிரிட்டன் பிரதமர் போரிஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவிருந்த பிரெக்ஸிட்டை, மேலும் மூன்று மாதங்கள் (2020 ஜனவரி) தள்ளிவைக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரை மனதுடன் கையொப்பமிடாத கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "இது நாடாளுமன்றத்தின் கடிதம். மற்றபடி, அது என்னுடைய கடிதமல்ல" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரெக்ஸிட் தாமதம் ஒரு பிழையெனத் தான் நம்புவதாகக் கூறி, பிரதமர் போரிஸ் இன்னொரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

பிரெக்ஸிட்டை தாமதம் ஆக்கக்கோரி பிரிட்டன் அனுப்பிய கடிதத்தை, தான் ஏற்றுக்கொண்டதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டொனால்டு டஸ்க் ட்வீட், donald tusk tweet
டொனால்டு டஸ்க் ட்வீட்
இதனால் பிரெக்ஸிட் ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் வாசிங்க : கிரிக்கெட் விளையாடிய ராகுல்: இளைஞர்கள் உற்சாகம்

பிரெக்ஸிட் இதுவரை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என பிரிட்டன் முடிவு செய்தது. 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் 51.9 சதவீத மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த பிரெக்ஸிட்டானது சுமுகமானதாக அமைய, முன்னாள் பிரதமர் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் சில பிரச்னைகள் இருந்ததால் பிரிட்டன் எம்.பி.க்கள், அதனை மூன்று முறை நிராகரித்தனர். இதனால் மார்ச் 29ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய பிரெக்ஸிட், அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனதால் கடந்த ஜூன் மாதம், பிரிட்டன் பிரதமர் தெரசா மே தன் பதவியை ராஜினாமா செய்தார். தெரசா மேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சனை புதிய பிரதமராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த ஜூலை மாதம் தேர்ந்தெடுத்தது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமில்லாமலோ பிரிட்டனை (அக்டோபர் 31ஆம் தேதி) வெளியேற்றியே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் இருக்கிறார். இதன் காரணமாக பிரெக்ஸிட் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளதாகக் கூறி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் செப்டம்பர் கூட்டத்தொடரை ஒருமாதம் முடக்குவதாக போரிஸ் அறிவித்தார்.

இது பிரிட்டன் எம்.பி.க்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த முடக்கத்துக்கு முன்பாக செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்த அவசரக் கூட்டத்தில் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டைத் தடுக்கும் வகையில் பென் ஆக்ட் (Benn Act) மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவின்படி, அக்டோபர் 19க்குள்ளாக எம்.பி.க்களின் ஆதரவோடு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரெக்ஸிட்டை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கவேண்டும்.

இதையும் வாசிங்க : 'விரைவுத் தேர்தலுக்கு நோ': போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் அடி!

இந்த நிலையில், புதிய பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம், நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனதாலேயே பிரதமர் போரிஸ் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Intro:Body:

Brexit deal news update

Conclusion:
Last Updated : Oct 20, 2019, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.