மாஸ்கோ : ரஷ்யன் ஏஎன்-26 ரக விமானம் நடுவானில் மாயமானது. இதில் 22 பயணிகள் பயணித்தனர். இந்தத் தகவலை அந்நாட்டின் அவசர பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், “ரஷ்யாவின் வடக்கு பிராந்தியமான கம்சட்கா தீபகற்ப பகுதியிலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம், பிராந்திய தலைநகர் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் பகுதியிலிருந்து கம்சாட்ச்கியிலிருந்து தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
விமானத்தை தேடும் பணியில் விமான மீட்புக் குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “விமானத்தில் 22 பயணிகளும் 6 ஊழியர்களும் பயணித்தனர்” எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்ளூர் வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபாக்ஸ் என்ற செய்தி நிறுவனம் இப்பகுதியில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : மியான்மர் நாட்டில் விமான விபத்து; மூத்த புத்த துறவி உள்ளிட்ட 12 பேர் உயிரிழப்பு