உலகளவில் புதிய உருமாறிய தொற்று ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், சர்வதேச மருத்து தயாரிப்பு நிறுவனமான பைசர் ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள புதிய மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய மருந்தை இரண்டாயிரத்து 250 பேரிடம் பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், புதிய மருந்தானது சுமார் 89% அளவிற்கு பாதிப்பை குறைத்து உயிரிழப்பை தடுப்பதாக தெரியவந்துள்ளது.
தொற்றின் ஆரம்ப கால அறிகுறியின் போதே இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க அரசு சுமார் ஒரு கோடி மருத்துகளை பைசர் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கோவிட் உயிரிழப்பு எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
டெல்டா, ஒமைக்ரான் போன்ற உருமாறிய தொற்று பரவல் காரணமாகவும், அங்கு நிலவும் குளிர் காலம் காரணமாகவும் மீண்டும் தினசரி பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஐந்து கோடியை தாண்டியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை இதுவரை 3.47 கோடி மொத்த பாதிப்புகளும், 4.75 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: என்னது 1 கிலோ டீத்தூள் ஒரு லட்சம் ரூபாயா? தேநீர் பிரியர்கள் ஷாக்