2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.5ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இமனுவேல் ஷார்பான்தியே (பிரான்ஸ்), ஜெனிபர் ஏ. டோட்னா (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்ற மேம்பாட்டிற்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம் என்பது உலகளில் பெரும் தாக்தத்தை ஏற்படுத்தும் கருவி எனவும் மருத்துவத்தில் புரட்ச்சிகர மாற்றங்களை இது ஏற்படுத்தும் என தேர்வுக்குழுவின் தலைவர் கேலேஸ் குடாஃப்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தத்துறை விஞ்ஞானிகள் பொறுப்புடன் கையாள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
தனக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம் என பரிசு பெற்ற இமனுவேல் ஷார்பான்தியே கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஜான் குடெனாப், பிரிட்டனின் ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானை சேர்ந்த அகிரா யோஷினோ ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா), மைக்கெல் ஹாட்டன் (பிரிட்டன்), சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெயின்ஹார்ட் கென்சல் (ஜெர்மனி), ஆன்ட்ரியா கேஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளை(அக்.8) அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: இயற்கை காதலியால் கரோனா காலத்தில் உயிர்பெற்ற 10 ஆயிரம் மரங்கள்!