ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கு மனித உரிமை மீறல் நடைபெற்று வருதாகவும், அம்மாநிலம் கூண்டிடப்பட்ட சிறையாக மாறியுள்ளதென்றும் பாகிஸ்தான் நேற்று ஐநா மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்தது.
இதனிடையே, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக, ஐநா மனித உரிமை ஆணைய வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்னையை ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பியது தொடர்பாக பலூசிஸ்தான் ஆர்வலர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இதுதான் கபடநாடகத்தின் உச்சம். பலூசிஸ்தானில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மறைக்கவே, பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் குறித்து ஆதரவாகக் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.