ETV Bharat / international

மனித உரிமை என்ற பெயரில் பாகிஸ்தான் அரசியல் செய்கிறது: இந்தியா - Pak using malicious political agenda says india at unhrc

ஜெனிவா: மனித உரிமை என்ற பெயரில் பாகிஸ்தான் தீங்கிழைக்கும் அரசியலை மேற்கொண்டு வருகிறது என ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.

geneva india
author img

By

Published : Sep 11, 2019, 3:01 PM IST

இதுதொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெளியுறவுத் துறை செயலாளர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் பேசுகையில், " ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் உள்நாட்டு விவகாரமாகும்.

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தைத் தொடர்ந்தே இந்த முடிவானது எடுக்கப்பட்டது. இதனை இந்திய மக்கள் வரவேற்றுள்ளனர். உள்நாட்டுப் பிரச்னைகளில் அந்திய நாடுகள் தலையிடுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது.

எங்கள் நாட்டைப் பற்றித் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளையும், வீண் வதந்திகளையும் அவர்கள் (பாகிஸ்தான்) பரப்பி வருகின்றனர்.

மனித உரிமை பேசுபவர்கள், தங்களது நாட்டில் அதனை நசுக்குகின்றனர். மனித உரிமை என்ற பெயரில் பாகிஸ்தான் தீங்கிழைக்கும் அரசியலை மேற்கொண்டு வருகிறது

ஆனால் இந்த கட்டுக்கதைகள் எல்லாம் பயங்கரவாதத்தின் புகலிடத்திலிருந்தே வெளிவருவதை இந்த உலகம் அறியும். மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அந்த நாடு தூதுக்கு (Diplomacy) மாற்றாகப் பயன்படுத்தி வருகிறது.

பயங்கரவாதத்திற்கு நிதி உள்ளிட்ட உதவிகள் கொடுத்து ஊக்குவிப்பதே அவர்கள் மேற்கொண்டுவரும் மிக மோசமான மனித உரிமை மீறலாகும். அரசாங்க உதவியோடு செயல்படும் பயங்கரவாதத்தால் குறிப்பாக இந்தியா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். அமைதியாக இருப்பதே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். பயங்கரவாதத்தை ஒழிக்கவும், அதற்கு உதவுபவர்களை தடுக்கவும் இந்தியாவுக்கு உலக சமூகம் உதவ வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, சமீபத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்துப் பேசிய அவர், "வெளிப்படையான, ஒருதலைப்பட்சமற்ற சட்டரீதியான நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்த முடிவானது இந்திய ஜனநாயக பாரம்பரியத்தின், இந்திய சட்டத்துக்குட்பட்டு எடுக்கப்பட்டதாகும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.