ETV Bharat / international

ஆறு வாரத்தில் ஆக்ஸ்போர்டின் கரோனா தடுப்பு மருந்து! - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

லண்டன் : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கோவிட்-19 தடுப்பு மருந்து, இன்னும் ஆறு வாரங்களில் தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Oxford COVID-19 vaccine
Oxford COVID-19 vaccine
author img

By

Published : Aug 31, 2020, 4:10 PM IST

உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கரோனா தொற்று காரணமாக பிரிட்டன், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போட்டு பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளது.

ஏற்கனவே ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதுள்ள அவசர நிலையைக் கருத்தில்கொண்டு, மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முழுவதுமாக நிறைவடையாமலேயே தடுப்பு மருந்திற்கு அனுமதியளித்துள்ளன. இந்தச் சூழலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கோவிட்-19 தடுப்பு மருந்து இன்னும் ஆறு வாரங்களில் தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் பிரிட்டனில் உச்சத்தில் இருந்த கரோனா தொற்றின் தாக்கம், தற்போது குறைந்துள்ளது. இதையடுத்து கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தி வருகிறது. மேலும், பள்ளிகளை மீண்டும் திறக்க பிரிட்டன் அரசு பரிசீலனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து குறித்து நம்பிக்கையுடன் இருந்தாலும், இது குறித்த கொண்டாட்டங்களில் தற்போது ஈடுபடுவது தேவையற்றது என்று தடுப்பூசியைக் கண்டுபிடிக்க இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் கேட் பிங்காம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வரும் குளிர் காலத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், நிலைமையை கருத்தில்கொண்டு பிரிட்டனும் மருத்துவப் பரிசோதனைகளை முழுமையாக முடிப்பதற்குள்ளாகவே, மக்கள் மீது தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இஸ்ரேல் – UAE ஒப்பந்தம்: மேற்காசிய அரசியலில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.