ஆக்ஸ்பாம் (Oxfam) அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள், கற்பனை செய்ய முடியாதவை. உலகம் முழுவதும் வறுமை, பசிக்கொடுமையில் வாழும் 15.5 கோடி மக்களின் வாழ்க்கையாகும். அவர்களில் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழக்கின்றனர். அந்த வகையில் ஒரு நாளைக்கு 15,840 பேர் உயிரிழக்கின்றனர். தற்போதுள்ள கரோனா பொருளாதார நெருக்கடியில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.
இதனால் கூடுதலாக 52 லட்சம் மக்கள் பாதிப்படைகின்றனர். இந்த நிலைமை ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மிக அதிகம்.
ராணுவமும் உணவுப் பாதுகாப்பின்மையும்
மேற்கூறியதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களது நாட்டில் நிலவிவரும் ராணுவ மோதல்களினால் உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகின்றனர். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரானது பட்டினி எனும் ஆயுதத்தை உருவாக்குகிறது. எதிரி நாட்டினால் வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளும் மனிதர்களை மட்டும் கொல்வதில்லை.
பயிர்கள், கால்நடைகளை அழிக்கின்றன. இதனால் உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. கரோனா பேரிடர் காலத்தில் மட்டும் உலகளாவிய ராணுவச் செலவு ரூ.5100 கோடியாகும். இந்தத்தொகை உலகம் முழுவதும் பசியால் வாழும் மக்களின் உணவளிக்கத் திரட்டப்படும் மொத்த நிதியை விட அதிகம். இப்படி பொருளாதாரம், தண்ணீர் பற்றாக்குறை, ராணுவம் உள்ளிட்டைவைகளால் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் உயிரிழக்கின்றனர் என்று ஆக்ஸ்பாம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உணவு கொடுத்த மூதாட்டி படுத்த படுக்கையில் இருக்கையில் வந்து ஆரத்தழுவிய குரங்கு