ETV Bharat / international

கொரோனா அச்சுறுத்தல்: இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் அவசர நிலை அறிவிப்பு!

மாட்ரிட்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ஸ்பெயின் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

spain, ஸ்பெயின்
spain corona
author img

By

Published : Mar 14, 2020, 4:52 PM IST

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. குறிப்பாக, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிமாக உள்ளது.

கொவிட்-19 தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்த இத்தாலி அரசு அந்நாட்டில் அவசர நிலையைப் பிரகனடப்படுத்தி போரக்கால அடிப்படையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதையடுத்து, இத்தாலிக்கு அடுத்தப்படியாக அதன் அண்டை நாடான ஸ்பெயினும் தற்போது அவசர நிலையை அறிவித்துள்ளது.

"நம் உடல், வாழ்க்கையைப் பாதிக்கும் பேரிடர் இது" எனக் கூறி அவசர நிலையை அறிவித்த ஸ்பெயின் பிரதமர் பெத்ரோ சான்செஸ், வரும் நாள்களில் அந்நாடு முழுவும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடும் என்றும், அதனை எதிர்கொள்ள அரசு ஆயத்தமாகி வருவதாகவும் கூறியுள்ளார்.

1970களில் முதலில் அந்நாடு முதல் முறையாக அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொவிட்-19 வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 140 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 83 பேருக்கு கொவிட்-19 வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இரணடு பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தேசியப் பேரிடரை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : மனைவிக்கு கொரோனா - கனடா பிரதமர் வீட்டிலிருந்து வேலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.