ETV Bharat / international

இது வைரஸ் சீசனா? மனிதர்களைத் தாக்கும் புதிய 'நோரோ வைரஸ்' - england new virus

இங்கிலாந்தில் தற்போது 'நோரோ வைரஸ்' பரவல் அதிகரித்துவருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Norovirus
நோரோ வைரஸ்
author img

By

Published : Jul 20, 2021, 6:27 PM IST

Updated : Jul 20, 2021, 7:07 PM IST

வைரஸ் என்ற சொல், கடந்தாண்டு முதல் நம்மை சுற்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இது வைரஸ் சீசனாகவே தற்போது மாறிவிட்டது. கரோனா வைரஸ், டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், கறுப்புப் புஞ்சை, மஞ்சள் பூஞ்சை வைரஸ் என அதன் வரிசை அடுக்கிக்கொண்டே செல்கிறது.

சமீபத்தில், சீனாவில் குரங்கு பி வைரஸ் பாதிப்பால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவிலிருந்து மீண்டும் ஒரு வைரசா என மக்கள் பீதியில் உள்ள நிலையில், புதிதாக நோரோ வைரஸ் இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Norovirus
கரோனாவைப் போல் பரவும் நோரோ வைரஸ்

நோரோ வைரஸ் (Norovirus)

கரோனாவைப்போல நோரோ வைரசும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியது ஆகும். ‘ஃபுட் பாய்சனிங்’ என்றும் நோரோ வைரஸ் அறியப்படுகிறது. இது உணவுக் குடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அறிகுறிகள்

வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் வலி, தலை வலி ஆகியவை நோரோ வைரசின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் தாக்கி 12 - 48 மணி நேரத்தில் அறிகுறிகள் தென்படும். இவை மூன்று நாள்கள் வரைகூட இருக்கும். அறிகுறிகள் இல்லாமல்கூட இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Norovirus
உணவுக் குடலை தாக்கும் நோரோ வைரஸ்

எப்படி பரவுகிறது?

சுத்தமில்லாத உணவு, தண்ணீர், சுத்தமில்லாத சுற்றுப்புறம் ஆகியவற்றிலிருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது. இதுமட்டுமின்றி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் உணவு, பாத்திரங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது இந்தத் தொற்றுக்கு ஒருவர் உள்ளாகக்கூடும்.

Norovirus
வைரஸ் சீசன்

தடுப்பது எப்படி?

இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும் தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Norovirus
மனிதர்களைத் தாக்கும் புதிய 'நோரோ வைரஸ்'

கைகளை அவ்வப்போது கழுவுதல், கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகு கை, கால்களைக் கழுவுதல், சானிடைசர் உபயோகிப்பதும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பதும் போதுமானதாகும்.

நோரோ வைரசும் கரோனா தொற்றைப் போல் பரவும் தன்மைகொண்டது என்பதால், உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்

Last Updated : Jul 20, 2021, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.