ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது திடீரென அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நவல்னி தற்போது கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும், அவரது உடல்நலம் தேறி வந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் பெர்லின் சாரைட் மருத்துமனை தெரிவித்துள்ளது.
பேசுவதை அவர் உணர்ந்துகொள்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை விஷத்தின் தீவிரத் தாக்கத்தில் உள்ளதால் அவர் நிலைமை சீராக நீண்டகாலம் பிடிக்கும் எனவும் மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி அந்நாட்டின் ஊழல் புகார் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிடன் ஆட்சிக்கு வந்தால் இரட்டை கோபுர தாக்குதல்போல வேறொன்று நடக்கும்'