ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த 21ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு அவர் விமானத்தில் வந்தபோது திடீரென மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
அவர் உடல்நிலை கடந்த சில நாள்களாக மோசமாக இருந்த நிலையில் தற்போது சிறு முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோமா நிலையில் உள்ள அவர் இயல்புநிலைக்குத் திரும்புவது கடினம் எனவும் இருப்பினும் இந்த முன்னேற்றம் நம்பிக்கை அளிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னிக்கு திட்டமிட்டு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னது கேமராவை ஆஃப் செய்யலயா? அரசு அலுவலரின் உல்லாசத் தருணம் ஜூம் காலில் அம்பலம்!