இங்கிலாந்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதித்தும் 47ஆயிரத்திற்கும் அதிகமனோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் மூலம் கடந்த நாள்களைக் காட்டிலும் தற்போது கரோனா பரவல் இங்கிலாந்தில் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு எம்பிக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் டிசம்பர் இரண்டாம் தேதிவரை அமல்படுத்தப்படுகிறது என இங்கிலாந்து தலைமை மருத்துவ அலுவலர் கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஊரடங்கு அமலில் விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை மூடப்படும். இந்த நிலை கரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் வரை நீடிக்கலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அமெரிக்க தேர்தலில் சாதனை படைத்த திருநங்கை!