ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டத்தை முன்னிட்டு காந்தி, மண்டேலா சிலைகள் மூடல்!

லண்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதிற்கு எதிராக நடக்கும் போரட்டத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி, மண்டேலா சிலைகள் மூடப்பட்டுள்ளன.

gandhi
gandhi
author img

By

Published : Jun 13, 2020, 7:47 AM IST

ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதின் எதிரொலியாக நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா தொடங்கி தற்போது உலகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்துவருகிறது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதிற்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டத்தின்போது இந்திய தூதரகத்திற்கு வெளியே அமைக்கப்படிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத கும்பலால் சேதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் லண்டனில் நடைபெறும் போராட்டத்தால் அடையாளம் தெரியாத நபர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற வாளாகத்தில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய முக்கிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் அச்சிலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

முன்னதாக இங்கிலாந்தில், லெஸ்டர் நகரில் மகாத்மா காந்தியின் சிலையை அகற்றக்கோரி மக்கள் வலியுறுத்தியிருந்தனர்

இந்த போராட்டங்களில் மக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்றும் போராட்டத்தில் திட்டமிட்டு வலது சாரியினர் மற்றும் வன்முறையாளர்கள் கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளவேண்டாம் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: காவல் துறையினரின் நிறவெறிக்கு எதிராக பிரேசில் நாட்டினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.