கரேனா வைரஸ் தொற்று சீனாவில் குறைந்துவருகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவருகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி நாட்டில் மட்டும் 10 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் சனிக்கிழமை (மார்ச்28) மட்டும் 889 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஒரே நாளில் ஐந்து ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இத்தாலியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கடந்த சில நாள்களாகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதற்கு முந்தைய நாள்களைவிட குறைவாகவே இருந்துவருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இருப்பினும், நிலைமை தற்போதும் மோசமாகவே இருப்பதால் தடை உத்தரவு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா!