தொடக்கத்தில் கரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்தது. இருப்பினும், பின்னர் இத்தாலியில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்தது.
இதனால், கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன்படி விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், இத்தாலியில் கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு அந்நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விளையாட்டுப் போட்டிகளை காண பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தாலியில் மீண்டும் ரசிகர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 5.2 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: நள்ளிரவு ஊரடங்கை அமல்படுத்திய ஸ்பெயின்