சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அதிகப்படியான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்காததுதான் இத்தகைய கடின சூழ்நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவிட்-19 பாதிப்பால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இத்தாலியில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்று 10 பக்கத்திற்கு மார்ச் 13 ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
-
Bergamo daily newspaper pic.twitter.com/N3ECABz8dr
— David Carretta (@davcarretta) March 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bergamo daily newspaper pic.twitter.com/N3ECABz8dr
— David Carretta (@davcarretta) March 14, 2020Bergamo daily newspaper pic.twitter.com/N3ECABz8dr
— David Carretta (@davcarretta) March 14, 2020
இந்தச் செய்தித்தாளை காணொலியாக எடுத்த இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். உருக்கமான இந்த ட்விட்டர் பதிவை அதிகப்படியான மக்கள் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இதே நாளிதழில் அரைப்பக்கத்திற்கு மட்டுமே கோவிட்-19 உயிரிழப்பு குறித்த செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது ஒருமாதம் கழித்து பத்து பக்கத்திற்கு கோவிட்-19 உயிரிழப்பு செய்தி மட்டுமே, அந்த நாளிதழ் முழுவதும் நிரம்பியுள்ளது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 அச்சுறுத்தல்: பிலிப்பைன்சில் சிக்கித் தவிக்கும் கேரள மாணாக்கர்