சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில்தான் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத அளவிற்கு பரவுகிறது. அதுமட்டுமின்றி தினந்தோறும் மனிதர்களின் உயிர்களையும் பறித்து வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பள்ளிகள், ஜிம்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகளை மூடவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
This man took a unique approach to social distancing at a market in Rome. https://t.co/GDqrFI4gdp pic.twitter.com/NsQOTkv35b
— ABC News (@ABC) March 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This man took a unique approach to social distancing at a market in Rome. https://t.co/GDqrFI4gdp pic.twitter.com/NsQOTkv35b
— ABC News (@ABC) March 13, 2020This man took a unique approach to social distancing at a market in Rome. https://t.co/GDqrFI4gdp pic.twitter.com/NsQOTkv35b
— ABC News (@ABC) March 13, 2020
இந்நிலையில், இத்தாலியின் ரோம் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் உலாவும் மனிதரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், அவர் தன்னை சுற்றிப் பெரிய அட்டையை மாட்டிக்கொண்டு சாலையில் செல்கிறார். அவரிடம் ஒருவர், இந்த பெரிய அட்டை எதற்கு என கேட்க அவர் "கொரோனா வைரஸுக்கு" என பதிலளிப்பது வேடிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கொரோனா அச்சம்: கர்நாடகாவில் மால்கள் மற்றும் திரையரங்குகள் மூடல்