ஜார்ஜியாவில் நடக்கவிருக்கும் ஐரோப்பியப் பெண்கள் கணித ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பங்கேற்க இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 13 வயதாகும் அன்யா கோயல், டல்விச்சில் உள்ள அலீன்ஸ் பள்ளியில் பயின்று வருகிறார்.
லாக்டவுன் சமயத்தில், வீட்டிலிருந்த அன்யா கணிதத்தின் மீதான ஆர்வத்தினால் அதனை மேம்படுத்திக்கொண்டார். பல வகையான ஆன்லைன் பயிற்சிகள் மூலம், யுகேஎம்டி ஏற்பாடு செய்த தேர்வுகளில் அதிக ஆர்வம் காட்டினார். ஒலிம்பியாட் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடிப்பதில், சில சமயங்களில் பல நாள்களாகும். எளிதில் மனம் தளராமல், கணக்கின் பதிலை புதிய வழிகள் மூலம் மாணவர்கள் கண்டறிய வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் 6 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில், 1000 பேர் மட்டுமே தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில், சிறந்துவிளங்கும் 100 பேர் மட்டுமே , அடுத்தகட்ட சுற்றுக்குத் தேர்வாகுகிறார்கள்.அந்த வகையில், அன்யா 100 பேரில் ஒருவராக, கணிதத்தில் சிக்கலான கணக்குகளைத் தீர்த்து இங்கிலாந்து அணியில் தேர்வாகியுள்ளார். குறைந்த வயதில் இந்த அணியில் இடம்பிடித்த நபர் என்ற சாதனையையும், அன்யா நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தியப் பயணி ரகளை'... அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானம்!