ETV Bharat / international

வணக்கம் வைத்த பிரிட்டன் இளவரசர்: இந்திய இணையவாசிகள் பெருமை

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், நம் நாட்டு வழக்கப்படி பிரிட்டன் இளவசர் வணக்கம் வைக்கும் காணொலியை இந்திய இணையவாசிகள் பெருமையுடன் ட்விட்டரில் வைரலாக்கிவருகின்றனர்.

charles
charles
author img

By

Published : Mar 13, 2020, 7:33 AM IST

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்காயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பால் பெருந்தொற்று (Pandemic) என்ற அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்துவரும் வேளையில், சக மனிதனுடன் கைக்குலுக்குவதை நிறுத்திக்கொண்டு இந்திய வழக்கப்படி கைகூப்பி வணக்கம் செலுத்துமாறு இஸ்ரேல், டென்மார்க் நாடுகள் அதன் மக்களை வலியுறுத்திவருகின்றன.

லண்டனில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்ற பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அங்கு வந்திருந்த விருந்தினர்களுடன் கைக்குலுக்குவதற்குப் பதிலாக இந்திய வழக்கப்படி வணக்கம் வைத்து வரவேற்பது போன்ற காணொலி வெளியாகியுள்ளது.

இந்தக் காணொலியை இந்திய இணையவாசிகள் ட்விட்டரில் பெருமையாக வைரலாக்கிவருகின்றனர்.

  • They ruled us for 100s of years but didn’t learn this from us. It took a pandemic to teach them Indian values

    — Pravin (@Pravinexa) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : அதிர்ச்சி: கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.