ஜெர்மனியின் முனிச் பகுதியில் நடந்த ஏலம் ஒன்றில், ஹிட்லர் தனது கைப்பட எழுதிய குறிப்பு ஒன்று ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் உலகம் முழுவதும் இருந்து ஏராளாமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்தக் குறிப்பு, இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் 1939ஆம் ஆண்டு பெர்லினில் இருந்த புதிய இராணுவ அலுவலர்களிடம், ஹிட்லர் தனது உரையை கோடிட்டுக் காட்டிய ஒன்பது பக்கப் பிரதியாகும். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஆரம்ப விலையைக் காட்டிலும் அதிக அளவில் விற்பனையானது.
ஏலத்தில் சுமார் 34 ஆயிரம் யூரோஸூக்கு (இந்திய மதிப்பில் சுமார் 29 லட்சம் ரூபாய்) இந்தக் குறிப்பை வாங்கிச் சென்றனர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் எழுதப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், ஹெர்மன் ஹிஸ்டோரிகா ஏல மையத்தினர் அவற்றை அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.