இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியினர், தங்களின் அரசக் குடும்ப பெயரை வர்த்தக முத்திரைக்காக பயன்படுத்தமாட்டார்கள். பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட தகவல்களை தொடர்ந்து அரச குடும்ப பட்டத்தை துறந்த ஹாரி-மேகனிடமிருந்து இந்த பதில் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ராயல் முத்திரையை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் தங்களின் விரக்தியை வெளிப்படுத்தி, ராயல் என்ற சொல்லுக்கு அதிகாரம் இல்லை என்றும், இனி தங்களின் பெயரை வர்த்தக முத்திரைக்கு பயன்படுத்தமாட்டோம்" என்றும் தெரிவித்தனர்.
இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி-மேகன் தம்பதியினர், கடந்த மாதம் அரச குடும்பத்தை துறந்தனர். இதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து அரச குடும்பம், இனி அவர்கள் தங்களின் அரச குடும்ப பட்டம் (HRH - His/Her Royal Highness) மற்றும் பொதுமக்களின் வரிப்பணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தமாட்டார்கள் என தெரிவித்தது.
இதையும் படிங்க: ஆவணம், கோப்புகளை எச்சில் தொட்டு திறக்க வேண்டாம் - உயர் அலுவலர் உத்தரவு