ETV Bharat / international

உலகளவில் 4.33 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு - உலகளவில் கரோனா பரவல்

உலகளவில் கரோனா பாதிப்பானது மீண்டும் வேகமாக தலைத்தூக்கி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்து வருகிறது.

COVID-19 tracker
COVID-19 tracker
author img

By

Published : Oct 26, 2020, 12:20 PM IST

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை நான்கு கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 174 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 009ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 19 லட்சத்து 636ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து 3 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 290 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 88 லட்சத்து 89 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 510 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் பனிக்காலம் நெருங்குவதால் அங்கு மீண்டும் நோய் தீவிரம் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்த் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டு வருவதால், அங்கு ஊரடங்கு மீண்டும் தீவிரமாக அமலுக்கு வருகின்றது.

இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: இத்தாலி அரசின் அதிரடி முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.