ரஷ்யாவில் கிராவோ- செபேட்ஸ்க் பகுதியில் வசித்து வந்தார் எவ்ஜீனியா சுல்யாதியேவா என்ற இளம்பெண். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றினார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு எவ்ஜீனியா குளிப்பதற்காகத் தனது வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது தன்னுடன் குளியலறைக்கு எடுத்து வந்த செல்போனை குளியல் தொட்டி அருகே உள்ள மின்சார பெட்டியில் சார்ஜ் போட்டுவிட்டு குளிக்கத் தொடங்கியுள்ளார்
அப்போது எதிர்பாராதவிதமாக சார்ஜ் போட்ட செல்போன் இளம்பெண் குளிக்கும் குளியல் தொட்டியில் விழுந்துள்ளது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர் குளியல் தொட்டியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் குளிக்கப் போன மகள் நீண்ட நேரம் வராத காரணத்தினால் சந்தேகமடைந்த இளம்பெண்ணின் தாயார், குளியலறைக்குச் சென்று பார்த்தார். அப்போது தன் மகள் குளியல் தொட்டிக்குள் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : பள்ளியில் தீ! - 28 மாணவர்கள் உள்பட 30 பேர் பலி!