சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி அரசு குறித்து பல்வேறு விமர்சனக் கட்டுரைகளை எழுதிவந்தார். இவர் 2018 அக்டோபர் மாதம், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.
பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தக் கொலைக்கும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக துருக்கி உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டின.
இதனை கண்டிக்கும் வகையில், சவுதிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி அரசு தடைவிதித்து.
இந்நிலையில், இந்த தடையானது 2020 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என ஜெர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் ஆலை, வயல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அயுத ஏற்றுமதி தடை நீட்டிக்கும் உத்தரவு குறித்து ஜெர்மனி அதிபர் ஏன்ஜெலா மெர்கலுக்கு அவரது கட்சியினரே கேள்வியெழுப்பியுள்ளனர்.