பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 302 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
திங்கள் கிழமை முதல் நேற்றுவரை 69 பேர் கரோனா தொற்றினாலும், சுவாச நோய் காரணமாக 368 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக அந்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89,301 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, பிரான்சில் முதியவர்கள், தொற்று பாதிப்புக்கு எளிதில் உள்ளாகக்கூடியவர்கள், முன்களப் பணியாளர்கள் என 39 லட்சத்து 96 ஆயிரத்து 329 பேர் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர்.
உலகளவில் 261 கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 79 தடுப்பூசிகள் மருத்துவப் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.
இதையும் படிங்க : 10% இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலை.க்கு நீதிமன்றம் கண்டனம்!