பாரிஸ்: பிரிட்டனில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு பிரான்ஸ் நாட்டிலும் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் புதிய உருமாறிய வைரஸின் முதல் பாதிப்பு பிரான்ஸ் நாட்டிலும் ஏற்பட்டுள்ளது என பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த பிரெஞ்சு குடிமகன், உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அந்நாட்டின் சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் நலமுடன் உள்ளார் என்றும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் தகவல்கள் கூறுகின்றன.
கரோனா வைரஸின் புதிய திரிபு முதன்முதலில் கடந்த வாரம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ் மற்ற சார்ஸ், கோவிட் (SARS-CoV-2) வகைகளை விட 70 சதவீதம் அதிகமாக பரவுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு புதிய ஐரோப்பிய கரோனா வைரஸ் ஏற்கனவே எட்டு ஐரோப்பிய நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை (டிச.25) கூறியது.
இதையும் படிங்க: புதிய கரோனா வைரசால் மக்கள் பீதி: சிறப்பு விமானங்கள் ரத்து!