ETV Bharat / international

பிரான்ஸ் அதிபரை அறைந்த சம்பவம்: இருவர் கைது! - world news

மக்கள் சந்திப்பின்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அறைந்த நபர் உள்பட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
author img

By

Published : Jun 8, 2021, 8:30 PM IST

பாரிஸ்: தென்கிழக்கு பிரான்ஸில் பொதுமக்களை சந்திக்கச் சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை கூட்டத்தில் இருந்த ஒருவர் கன்னத்தில் அறைந்தார். அதனைத் தொடர்ந்து அதிர்ச்சியுற்ற அருகிலிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், அறைந்த நபரை கீழே தள்ளிவிட்டனர்.

முன்னதாக, அதிபரை அறைந்த சமயத்தில் ‘டவுன் வித் மேக்ரோனியா’ என்றும் சில நபர்கள் கூச்சலிட்டுள்ளனர். அந்நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரண்டு பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இச்சம்பவத்தின் பிறகும் அதிபர் இம்மானுவேல் தொடர்ந்து மக்களை சந்தித் வருகிறார்.

இந்தச் சம்பவம் ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் முன்னதாகக் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாளை குவைத் செல்கிறார் ஜெய்சங்கர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.