ETV Bharat / international

மத்திய லண்டனில் கரோனா விதிமீறலில் ஈடுபட்ட நால்வர் கைது!

லண்டன்: கரோனா விதிமுறைகளை மீறிய நான்கு பேரை மத்திய லண்டனில் காவல் துறையினர் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தனர்.

மத்திய லண்டன் காவல் துறை
மத்திய லண்டன் காவல் துறை
author img

By

Published : Dec 7, 2020, 1:53 PM IST

கடந்த மாத இறுதியில் இங்கிலாந்தில் கரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.

கடந்த நவம்பர் 5ஆம் தேதிமுதல் டிசம்பர் 2ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு அமலில் இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவந்த நிலையில் இங்கிலாந்து அரசு ஊரடங்கை கட்டுப்பாடுகளுடன் முடித்தது.

ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், பலரும் வீட்டைவிட்டு வெளியேறி கடைகளுக்குச் செல்லத் தொடங்கினர். கடந்த சனிக்கிழமை அன்று (டிச. 05) லண்டன் நகரத்திலுள்ள நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஒரு ஆடம்பரக் கடையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்த நிலையில், கரோனா விதிகளை மீறிய நால்வரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த நால்வரும் முகக்கவசம் அணியாமல், தனிநபர் இடைவெளியையும் பின்பற்றாமல் அலட்சியமாக நடந்துள்ளனர்.

இந்த நால்வரும் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் கடைக்குள் நுழைய முயன்றதால் இவர்களுக்கும், அங்கு பணிபுரிந்த காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாகத்திலிருந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்த காவல் துறையினர் கூட்டத்தைக் கலைந்துசெல்லும்படி அறிவுறுத்திவிட்டு நால்வரையும் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தனர்.

நெருங்கிவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரணமாக ஊரடங்கிற்குப் பிறகு மீண்டும் கடைகளைத் திறக்க இங்கிலாந்து அரசு அனுமதித்துள்ளது. ஆனால் நெருக்கமான குடியிருப்புகள் நிறைந்த மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் உணவகங்கள், பார்கள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.