ஃபிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007ஆம் ஆண்டுமுதல் 2012ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தனது தேர்தல் பரப்புரைக்கான நிதி திரட்டியதில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்த விவகாரத்தில் நீதிபதிக்கு சர்கோஸி கையூட்டு கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததது. இந்தக் குற்றச்சாட்டு தற்போது நிருபணமாகி அந்நாட்டு நீதிமன்றம் சர்கோஸியை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதலில் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பின்னர் ஓராண்டு தண்டனையை அனுபவித்தால் போதும் என உத்தரவிட்டுள்ளது. நவீன ஃபிரான்ஸ் அரசு அமைந்த பின்னர், நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து சிறை தண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் என்ற அவப்பெயர் தற்போது நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரேசிலில் மீண்டும் தலைதூக்கும் கரோனா; திரும்புமா ஊரடங்கு!