ஹைதராபாத்: ஏழை மாணவர்களுக்கு கைகொடுக்கவும், அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டத்தின் 3வது பதிப்பை எஸ்பிஐ அறக்கட்டளை (SBIF ASHA SCHOLARSHIP PROGRAM) தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? தகுதிகள் என்ன? தேவையான ஆவணங்கள்? கடைசி தேதி எப்போது? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தகுதி:
- இந்திய குடியிரிமை பெற்ற மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்
- விண்ணப்பதாரர்கள் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும்
- முந்தைய கல்வியாண்டில் குறைந்தது 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன
- SS மற்றும் ST விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 15 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்
தேவையான ஆவணங்கள்:
- கடந்த கல்வியாண்டு மதிப்பெண் பட்டியல்
- அரசு அடையாளச் சான்று (ஆதார்)
- நடப்பு ஆண்டு கல்விக் கட்டண ரசீது
- நடப்பாண்டு கல்வி சேர்க்கை ஆவணம் (ஐடி கார்டு/போனஃபைட் சான்றிதல்/அட்மிஷன் லெட்டர்)
- வங்கி கணக்கு விவரங்கள் (குழந்தைகள் இல்லையென்றால் பெற்றோர்கள்)
- வருமான சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
விண்ணப்பிப்பது எப்படி?:
1. முதலில் sbifashascholarship.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2. உதவித்தொகை பத்தியில் பள்ளி மாணவர்களுக்கான SBIF ஆஷா உதவித்தொகை திட்டத்தை கிளிக் செய்யவும்.
3. முழு விவரங்களையும் படித்தவுடன் அப்ளை நவ் (Apply Now) ஆப்சனை கிளிக் செய்யவும்.
4. இப்போது மற்றொரு பக்கம் திறக்கும். அங்கு உங்கள் விவரங்களுடன் உள்நுழைய வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்திற்கு நீங்கள் முன்பே விண்ணப்பித்திருந்தால், அப்ளை நவ் ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
இதுவே முதல் முறை என்றால் பதிவு (Register) ஆப்ஷனை கிளிக் செய்து, அங்கு கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிட்டு பதிவை முடிக்கவும். அதன் பிறகு அந்த விவரங்களுடன் Buddy4Study-ல் உள்நுழைய வேண்டும்.
5. பின்னர் SBIF ஆஷா உதவித்தொகை திட்டம் 2024 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
6. இறுதியாக, சரிபார்ப்புக்கு பின்னர் சமர்பிக்கவும்.
தேர்வு செயல்முறை: - கல்வி செயல்திறன், நிதி தேவைகள் மற்றும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் எஸ்பிஐ ஆஷா ஸ்காலர்ஷிப் 2024 திட்டத்திற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொலைபேசி நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு நடத்தப்படும். பின்னர், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் உதவித்தொகை தொகை செலுத்தப்படும்.
கடைசி தேதி: ஆர்வமுள்ள மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் உதவித்தொகை திட்டம்.
இதையும் படிங்க:
- முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்; எப்படி விண்ணப்பிப்பது!
- வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கும் சென்னை பல்கலைக் கழக பணியாளர்கள்! காரணம் என்ன?
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்