ETV Bharat / international

நீரவ் மோடி எப்போது இந்தியா கொண்டுவரப்படுவார்? - வைர வியாபாரி நீரவ் மோடி

லன்டன்: வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் வழக்கை செப்டம்பருக்கு லண்டன் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Nirav Modi
Nirav Modi
author img

By

Published : May 16, 2020, 1:00 PM IST

வங்கி முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் மேல்முறையீடு மனுவை லண்டன் நீதிமன்றம் ஆறு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி பாங்க ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்து சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.

இதையடுத்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவர மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளிடம் தொடர்பு கொண்டு பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக நீரவ் மோடியின் சார்பில் தொடர்ச்சியாக முறையீட்டு மனு லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நீரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம், இந்த மனுவை வரும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. நேற்று விஜய் மல்லையாவின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய உத்தரவால் நீரவ் மோடி தரப்பு தற்போது நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.
இதையும் படிங்க: எண்ணப்படும் மல்லையாவின் நாள்கள்.. மத்திய புலனாய்வு அமைப்பிற்கு வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.