மாஸ்கோ: சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு 15 நாடுகளாக பிரிந்தது. அதன்படி ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனி நாடுகளாக பிரிந்தன. இதற்கு முன்னதாகவே உக்ரனை ரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன்காரணமாக ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லைகளில் ஊடுருவி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துவருகிறது.
இதனால், உக்ரைனும் இழந்த பகுதிகளை தன் நாட்டுடன் இணைக்க பதிலடிகொடுத்துவருகிறது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையே 2014 முதல் போர் சூழல் நிலவி வருகிறது. இதனிடையே இன்று போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படையால் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் மோதிவருகின்றன. இதில், 5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் ராணுவ நடவடிக்கை - புதின் அறிவிப்பு