நார்வேயில் உள்ள நார்டிக் சீ ஆங்கிளிங் என்னும் மீன்பிடி நிறுவனத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக பணிபுரிந்து வருகிறார் ஆஸ்கார் லுண்டாஸ். இவர் அந்தோயா தீவு அருகே ப்ளூ ஹாலிபட் என்னும் அரிய வகை மீனைத் தேடி ஆழ் கடலிற்குச் சென்றுள்ளார். அந்த மீன் வகைகள் கடற்கரை பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில்தான் காணப்படும்.
ஆனால் அப்போது ஏதோ ஒன்று பெரியதாக தூண்டிலை இழுப்பது போல உணர்ந்த காரணத்தினால் விடாமல் பிடித்து இழுத்துள்ளார். சுமார் அரை மணி நேரம் போராடிப் பிடித்த மீனைப் பார்த்து ஆச்சரியத்தில் துள்ளிக் குதித்துள்ளார். அந்த மீனானது மாறுபட்ட தோற்றத்தில் காணப்பட்டுள்ளது. பெரிய கண்களுடன், வித்தியாசமான வாய் தோற்றத்தில் ஏலியன் போலவே காட்சி அளித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்கார் தூண்டிலில் சிக்கியுள்ளது சுறா மீன் வகையைச் சேர்ந்த ரேட்பிஷ் மீன் என தெரியவந்துள்ளது. அதற்கு இரவிலும் கண் பார்வை நன்கு தெரிவதற்கு வசதியாகத் தான் மிகப் பெரிய கண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரேட்பிஷ் மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் மட்டுமே வசிப்பதால் மீனவர்களிடம் எளிதில் சிக்கிக் கொள்ளாதது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: இனி கல்யாண வீட்டில் கம்மியா தான் சாப்பிடவேண்டும் போல... வீட்டுக்கு பில் அனுப்பிய மணப்பெண் வீட்டார்!