ETV Bharat / international

இந்தாண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்: காரணம் என்ன?

author img

By

Published : Mar 20, 2021, 5:40 PM IST

ஹெல்சின்கி: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது முறையாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Finland retains title of World's Happiest Country
பின்லாந்து

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்படும், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க், உலகில் எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிய 2012ஆம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இந்தாண்டு ஆய்வு மேற்கொள்வதற்காக, 149 நாடுகளை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்து, இரு காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்தது.

அதில் பின்லாந்து மிகவும் மகிழ்ச்சியான நாடாக மதிப்பீடு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைப் பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற நாடுகளிலேயே ஐரோப்பியர் அல்லாத ஒரே நாடு நியூசிலாந்துதான்.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 14ஆவது இடத்தையும், இங்கிலாந்து 18ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜெர்மனி கடந்த ஆண்டில் 17ஆவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில், மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகள் முறையே ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து, பின்லாந்து முதலிடம் பிடிக்க காரணம்?

கரோனா நெருக்கடியினால் மக்களின் வாழ்க்கை கட்டமைப்பு, தரம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றம், கரோனா தொற்றின் கையாண்டவிதம் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, தனிநபர் உள்நாட்டு மொத்த உற்பத்தி, சமூக ஆதரவின் நிலை, தாராள மனப்பான்மை, வேலைக்கான உத்தரவாதம், ஊழல் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தக் காரணிகளில் அதிகபட்சமாக நேர்மறை குறியீடுகளைப் பெற்று பின்லாந்து முதலிடத்தைத் தக்க வைத்துவருகிறது.

இதையும் படிங்க:உயரம் ஒரு குறையில்லை: வைரல் வீடியோவால் ஒன்றிணைந்த ஜோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.