ஐரோப்பிய ஒன்றியம் ஃபிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென நாடாளுமன்றம் ஒன்றை நடத்திவருகிறது. இந்நிலையில், உறுப்பு நாடுகள் தங்களுக்கான பிரநிதிகளை தேர்தெடுக்க தேர்தலை நடத்தியது. இதில், 28 நாடுகளிலிருந்து 200 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை 51 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஃபிரான்ஸ் நாட்டின் வலதுசாரி கட்சியான லி பெனின் "நேஷனல் ராலி" 24 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில், அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் "என் மார்ச்" கட்சி 23 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய நேஷனல் ராலி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோர்டன் பார்டெல்லா, ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு தெளிவான தண்டனையை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று பிற உறுப்பு நாடுகளுக்கான பிரநிதிகளும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.