விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டது உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் ரகசியங்களை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எட்வர்டு ஸ்னோடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஈக்வேடார் தூதரகத்தில் இங்கிலாந்து உளவுத்துறை அசாஞ்சேவை இழுத்துச் சென்ற புகைப்படம் வரலாற்று புத்தகத்தில் பதிந்துவிட்டது. இந்த கைது அவரின் விமர்சகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கலாம். ஆனால், பத்திரிகை சுகந்திரத்துக்கு இது இருண்ட தருணம் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லுக் ஆண்டாய்ன் கூறுகையில், பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான சதியை அம்பலபடுத்தி நாட்டின் சுகந்திரத்திற்கு பெரும் பங்காற்றியவர் அசாஞ்சே. எனவே, அவருக்கு அரசியல் அடைக்களம் அளித்து நாட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.