ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து கோவிட்-19 தடுப்பூசிக்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத் தொழிலாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ள ஃபைசர்-பயோ என்.டெக். நிறுவனத்தின் முதல் தடுப்பூசியை சன்னா எல்காத்ரி என்ற செவிலி பெற்றுக்கொண்டார்.
மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நெதர்லாந்து தாமதமாக ஒப்புதல் வழங்கியுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டில் சுமார் 8.3 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 12 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவதற்கான முயற்சியை நெதர்லாந்து அரசு மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா பரவல்: அவசரநிலை பிரகடனப்படுத்த ஜப்பான் அரசு முடிவு